search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித நீராடினர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    லக்னோ:

    உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரில் நடக்கிற கும்பமேளா மிகவும் பிரசித்திப் பெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

    அந்த வகையில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடர்ந்து 50 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.



    கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு உலகெங்கிலும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இன்று புனித  நீராடினர். அத்துடன், கங்கை நதிக்கு ஆரத்தி காண்பித்து பரவசத்துடன் வழிபட்டனர். #KumbhMela #BJP #AmitShah #YogiAdityanath
    பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்குள் நுழைந்துள்ளது தொடர்பாக விமர்சித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பூஜ்யத்துடன் இன்னொரு பூஜ்யம் சேர்ந்தாலும் பூஜ்யம்தான் வரும் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அக்கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. அனேகமாக, தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடக் கூடும் என தெரிகிறது. 



    இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரியங்கா ஒன்றும் முதல் முறையாக தீவிர அரசியலுக்குள் நுழையவில்லை. கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதும், உ.பி. சட்டசபை தேர்தலின் போதும் பிரியங்கா காந்தி காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அக்கட்சியின் துரதிருஷ்டம் அப்போது ஆரம்பித்தது. இப்போதும் அதே நிலைதான் ஏற்படும்.

    பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் ஒன்றும் மாறிவிடாது. பூஜ்யம் பூஜ்யம்தான். காங்கிரஸ் ஒரு பெரிய பூஜ்யம், அதில் யார் இணைந்தாலும், அதுவும் பூஜ்யம்தான் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார். #YogiAdityanath #DefenceExpo
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ராணுவ கண்காட்சி 2018 கடந்த புதன்கிழமை தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.

    இந்த கண்காட்சி நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச மாநில தொழிற்துறை மந்திரி சதிஷ் மஹானா எடுத்துள்ளார்.



    இந்நிலையில், கான்பூரில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சியை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று பார்வையிட்டார்.

    அப்போது அவர் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மற்றும் பல்வேரு சாதனங்கள் இயங்கும் செயல் முறைகளை கேட்டறிந்தார். #YogiAdityanath #DefenceExpo
    உத்தரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்டமான ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளியில் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளார். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி அமைந்து இருந்த பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற கேள்விக்கு இன்னும் இறுதி முடிவு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் இழுபறி நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் சரயு நதிக்கரையில் அமைக்கப்படவுள்ள பிரமாண்ட ராமர் சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், அயோத்தியில் சரயு நதிக்கரையில் மிக பிரமாண்டமாக 107 மீட்டர் உயரத்தில் (351 அடி) ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை 44 மீட்டர் (144 அடி) உயரம் உள்ள பீடத்தில் வைக்கப்படுகிறது. ஆக சிலை, பீடம் இரண்டும் சேர்ந்து மொத்த உயரம் 151 மீட்டர் (495 அடி) ஆகும்.



    இந்த சிலையை சரயு நதிக்கரையில் சரியாக எந்த இடத்தில் வைப்பது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ராமர் சிலை வெண்கலத்தில், டெல்லியை அடுத்த நொய்டாவை சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்படுகிறது. இந்த சிலையை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையின்போது திறந்து வைக்கிறார்.

    சிலை வைக்கப்படுகிற இடத்தையொட்டி, அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதில் ஒரு கலைக்கூடமும், கலை அரங்கமும் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியகம், கலைக்கூடத்தில் ராமபிரானின் ஒட்டுமொத்த வாழ்வு சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் இடம் பெறும். கலையரங்கைப் பொறுத்தமட்டில் நாட்டின் பல்வேறு அமைப்புகளும் ‘ராம்லீலா’வை அரங்கேற்றுவதற்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கலையரங்கில் ‘லேசர்’ படக்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். #Ayodhya #LordRamarStatue #YogiAdityanath
    உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்  கனமழையில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.

    கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  இதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று இன்று பார்வையிட்டார்.

    பஸ்தி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
    ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள் என யோகி ஆதித்யநாத்துக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனா நதிக்கரையில் உள்ளது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த தாஜ்மகாலை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

    ஆனால், தாஜ்மகால் உத்தரப்பிரதேசம் மாநில அரசால் முறையாக கவனிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
    இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மாநில அரசின் செயல்பாடுகள் முறையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று, உலகப்புகழ் பெற்ற தாஜ்மகால் அமைந்திருக்கும் ஆக்ரா நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதையும் பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக மாற்ற உத்தரவாதம் அளித்துள்ளது. சுற்றுலா பயணிகளும் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தவும் தடை செய்ய இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாக்கும் பொறுப்புகளை தனியார் நிறுவனத்துக்கு அளிக்கும் பரிந்துரையை உ.பி. மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. 

    உ.பி. மாநில அரசின் இந்த அறிவிப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உங்களால் தாஜ்மகாலைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுங்கள். முதல் மந்திரி நாற்காலியை இதுபோல் தனியார் நிறுவனத்துக்கு அளித்து பாதுகாக்க செய்ய முடியுமா? என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். #YogiAdityanath #Tajmahal #ArvindKejriwal
    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ் கல்லீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS

    டேராடூன்:

    உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் யோகி ஆதித்யநாத். இவரது தந்தை ஆனந்த் சிங் பிஷ். இவர் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், ஆனந்த் சிங் பிஷ்ஷுக்கு இன்று கல்லீரலில் கடும் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலையை  மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என டாக்டர்க்ள் தெரிவித்தனர். #UPCMYogi #YogiAdityanathFather #AIIMS
    உ.பி. முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் திருப்பி அனுப்பப்பட்டதால் பத்தாம் வகுப்பில் 7வது இடம் பிடித்த மாணவர் அதிர்ச்சி அடைந்தார். #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வதி இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.

    கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.

    இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.

    இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UttarPradesh #BoardTopper #ChequeBounce
    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் பாஜக முதுகில் குத்திவிட்டது என உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மக்களவை தொகுதிக்கு மே 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் சிவசேனா, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

    இந்நிலையில், விரார் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாஜகவை சேர்ந்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் நேற்று பேசியதாவது:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியினர் இந்துத்துவா பாதையில் இருந்து திசைமாறி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியால் தான்  வளர்ச்சி சாத்தியமாகும்.

    எங்கள் கட்சி விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிட்டு வருகிறது. பாஜக அதன் கூட்டணி கட்சியால் முதுகில் குத்தப்பட்டு வருகிறது. இதை காணும் ண்டால் பால் தாக்கரே ஆன்மா மிகவும் வருந்தும், துக்கப்படும்,

    பால்கர் தொகுதியில் பாஜகவினர் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
    மகாராஷ்டிரா மாநில மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இந்த தேர்தலில் பெறும் வெற்றி மூலம் நிலையான ஆட்சி கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைவது உறுதி என தெரிவித்தார். #PalgharBypoll #PMModi #YogiAdityanath #Sivasena
    உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மகன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா. இவருடைய மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு கற்பழித்து விட்டதாக 28 வயது பெண் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அப்பெண் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தனது குற்றச்சாட்டு பற்றிய விவரங்களை தெரிவிக்க முதல்-மந்திரியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அப்பெண்ணுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தனது நற்பெயரை சீர்குலைக்க சமாஜ்வாடி கட்சி தீட்டிய சதி இது என்று ரோஷன்லால் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    ×